புதுச்சேரி: புதுச்சேரி நந்திகேஸ்வரர் சுவாமி கோவிலில், நாளை (14ம் தேதி) ருத்ர ஹோமம் நடக்கிறது.புதுச்சேரி, வெள்ளாழ வீதியில் நந்திகேஸ்வரர் சுவாமி கோவிலில், ஆடி மாத பவுர்ண மியை முன்னிட்டு நாளை (14ம் தேதி) ருத்ர ஹோமம் நடக்கிறது.
அதனையொட்டி, காலை 6.00 மணிக்கு கணபதிஹோமம், ருத்ர ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, காலை 8.00 மணிக்கு மகா அபிஷேக ஆராதனையும், மாலை 6.00 மணிக்கு பவுர்ணமி பூஜை நடக்கிறது.ஏற்பாடுகளை நாடு சண்முக வேலாயுத சுவாமிகள் அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.