ஆர்.எஸ்.மங்கலம்:அன்று முதல் தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. நேற்று (ஆக., 12ல்) பச்சனத்திகோட்டை விநாயகர் கோவில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து கோவில் முன்பு தீ மிதித்து நேர்த்திகடன் நிறைவேற்றினர்.
பின் பொங்கல் வைத்தும், கிடாய் வெட்டியும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆனந்துார், மேலவயல், காட்டுக்குளம், பச்சனத்திகோட்டை, பாப்பாகுடி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமத்தினர் கலந்து கொண்டனர்.