திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது.நந்தி பகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கபட்டுபக்தர்களுக்கு காட்சியளித்தார். மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தன.
பக்தர்கள் தேவாரம், திருவாசகம் போன்ற பக்திபாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. காளை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. திருவெற்றியூர் வன்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் போன்ற கோயில்களிலும் பிரதோஷ விழா நடந்தது.