அலங்காநல்லுார்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் ஆடி பிரமோற்ஸவ பெருவிழா ஆக., 7 கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் மாலை பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்த ருளினார். இன்று (ஆக., 14) இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடுநடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஆடித்தேரோட்டம் நாளை (ஆக., 15) நடக்கிறது. அன்று காலை 5.15 முதல் 6:00 மணிக்குள் திருத்தேருக்கு பெருமாள் தேவியர்களுடன் எழுந்தருள்கிறார். பின் திருத் தேரோட்டம் நடக்கும். இரவு பூப்பல்லக்கும், ஆக., 16 தீர்த்தவாரியும், 17 உற்ஸவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறும். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாஜலம் மற்றும் பலர் செய்து உள்ளனர்.