விழுப்புரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பவித்ர உற்சவ ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2019 02:08
விழுப்புரம்:பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், பவித்ர உற்சவ ஹோமம் நிறைவு விழா நடந்தது.
விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், கடந்த 10ம் தேதி மாலை 6:00 மணியளவில் பவித்ர உற்சவ ஹோமம் துவங்கியது. 11ம் தேதி காலை 11:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு அபிஷேகம், மதியம் 12:30 மணிக்கு பவித்ர மாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
பவித்ர உற்சவ ஹோமம் நிறைவு நாளான நேற்று (ஆக., 13ல்) காலை 11:00 மணிக்கு, பவித்ர ஹோமம், இரவு 7:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 8:00 மணிக்கு பவித்ர மாலை களைதல் மற்றும் உற்சவர் அபிஷேகம், சாற்றுமுறை நடந்தது.
பின்னர், உற்சவர் புறப்பாடாகி, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு கலச தீர்த்த அபிஷேகம் நடந்தது. மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயக்குமார், பிரதான அர்ச்சகர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.