மதுரை: மதுரை கோச்சடை டோக்நகர் 7வது குறுக்குத்தெரு சின்மயா மிஷனில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ’கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்’ எனும் தலைப்பில் சுவாமி சிவயோ கானந்தாவின் சிறப்பு சொற்பொழிவு ஆக.,20 முதல் 23 வரை தினமும் மாலை 6:15 முதல் இரவு 7:45 மணி வரை நடக்கிறது. ஆக.,23 கிருஷ்ணருக்கு பூஜை, அர்ச்சனை, ஆரத்தி மற்றும் ஆக.,24 பாலவிஹார் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது.