கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அருகே தொந்திலிங்கபுரம் கல்லுகட்டி கருப்பண்ண சுவாமி கோயிலில் மழை பெய்ய வேண்டி ஆடி படையல் இடப்பட்டது.
இதில் நேர்த்த்திக்கடன்செலுத்த வேண்டியவர்கள்287 கிடாக்களை நேற்று முன் தினம் (ஆக., 12ல்) இரவு வெட்டினர். பின் இரவு முழுவதும் சமைத்தனர். நேற்று (ஆக., 13ல்)காலை சுவாமிக்கு படை யல் இடப்பட்டு 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 18 கிராம ஆண்கள் மட்டும் கலந்து கொண்டனர்.