திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2019 03:08
திருப்பூர்:திருப்பூரில், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்து முன்னணி திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில், அகண்ட பாரதம் சபதமேற்பு விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் போயம்பாளையத்தில் நடந்தது.
மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சேவுகன் தலைமை வகித்தார்; மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவா முன் னிலை வகித்தார். மாநில செயலாளர் கிஷோர்குமார் சிறப்புரையாற்றினார்.இதில், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.வடக்கு ஒன்றிய பகுதிகளில், இந்த ஆண்டு அதிக இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.