பதிவு செய்த நாள்
16
ஆக
2019
02:08
பொன்னேரி:ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, திருவேங்கடாபுரம், பொன்னியம்மனுக்கு பாலாபி ஷேகம் மற்றும் பல்லக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது.
பொன்னேரி, திருவேங்கிடபுரம், பொன்னியம்மன் கோவிலில், ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, 10ம் ஆண்டு, பால்குட விழா நடைபெற்றது.திருவேங்கிடபுரம் கிராம மக்கள் மற்றும் ஆண்டார் குப்பம், பாலசுப்ரமணிய சுவாமி பாதயாத்திரை குழு சார்பில் நடைபெற்ற விழாவில், நுாற்று க்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தி சென்றனர்.
வேண்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து நடை பயணமாக பொன்னியம்மன் கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய் தனர்.அப்போது, பொன்னியம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து, பொன்னியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந் தன. ஆடி பவுர்ணமி விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென் றனர்.