விநாயகர் சதுர்த்தி விழா பிள்ளையார் கண்கள் சேகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2019 02:08
வாலாஜாபாத்:தமிழகம் முழுவதும், செப்., 2ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு, விதவிதமான விநாயகர் பொம்மை சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன.
அதற்கேற்ப, பொம்மைகளுக்கு வர்ணங்கள் தீட்டும் பணியை, பொம்மை தயாரிக்கும் தொழிலா ளர்கள் செய்து வருகின்றனர்.களி மண்ணில் விநாயகர் சிலை தயாரிக்கும் மண்பாண்ட தொழிலா ளர்கள் சிலர், பிள்ளையார் கண்களுக்காக, கிராமங்களில், சிகப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் விளை ந்து இருக்கும், குண்டுமணிவிதைகளைசேகரிக்கின்றனர்.
அனைத்து பாகங்களும் அச்சில் வரும் போது, கண்கள் மட்டும் பதிக்காமல், விழா நாளில் கொடுப் பதற்கு சேகரிக்கிறோம் என, மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.