ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கம் கோயில்களில் ஆடி அமாவாசை திருவிழாவில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் மூலம் ரூ.41 லட்சத்து 86 ஆயிரம் காணிக்கை பெறப்பட்டுள்ளது.
ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 1 வரை, ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கபட்டனர்.ஆக.13 மற்றும் 14 இருநாட்களில் கோயில் உண்டியல்கள் திறக்கபட்டு காணிக்கைகள் எண்ணும் பணி, மதுரை மண்டல உதவி ஆணையர் விஜயன் தலைமையில் நடந்தது.இதில் சுந்தரமகாலிங்கம் கோயிலில் ரூ.37 லட்சத்து 32 ஆயிரத்து 892, தங்கம் 14 கிராம், வெள்ளி 233 கிராம், சந்தனமகாலிங்கம் கோயிலில் ரூ.4 லட்சத்து 53 ஆயிரத்து 772ம், மொத்தம் ரூ. 41 லட்சத்து 86 ஆயிரத்து 664 ரூபாய் காணிக்கையாக வரபட்டுள்ளது. உண்டியல் எண்ணும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.