பதிவு செய்த நாள்
16
ஆக
2019
03:08
கிருஷ்ணகிரி: ஆவணி அவிட்டம், ஆடி மாத அமாவாசைக்கு பிறகு அவிட்டம் நட்சத்திர நாளில் வரக்கூடிய விழாவாகும். இதில், காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் தங்களுடைய பழைய பூணூலை எடுத்து விட்டு, புதிய பூணூலை அணிந்து கொள்வர். ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி பழையபேட்டை கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், நேற்று (ஆக., 15ல்) காலை, 5:30 மணிக்கு நடந்தது. இதில், ஆரிய வைஸ்ய சமூகத்தை சேர்ந்தவர்கள், சிறப்பு பூஜைகள் செய்து, காயத்ரி மந்திரங்களை கூறி, கணபதி ஹோமங்கள் நடத்தி பூணூல் அணிந்தனர்.
* தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எச்.புதுப்பட்டியில், விஸ்வகர்மா சமுதாய த்தினர் புதிய பூணூல் அணியும் நிகழ்ச்சி நேற்று (ஆக., 15ல்) நடந்தது. காலை, 8:00 மணிக்கு, அங்குள்ள விநாயகர் கோவிலில், சுவாமிக்கு கணபதி ஹோமம், காயத்ரி பூஜை, 108 சங்கா பிஷேகம் நடந்தன. தொடர்ந்து, பூணூல் அணியப்பட்டது. பின், பெண்களுக்கு மாங்கல்ய பூஜை நடந்தது. விழாவில், பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.