பதிவு செய்த நாள்
16
ஆக
2019
03:08
கிருஷ்ணகிரி: நாக சதுர்த்தியை முன்னிட்டு, நாகம்மா கோவிலில் மஹா பாலாபிஷேக திரு விழா நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த சின்னதக்கேப்பள்ளி நாக வனத்தில், நாகம்மா கோவில் உள்ளது.
இங்கு அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். தற் போது நாக வனத்தில் புற்று அமைத்து கோவிலை விரிவுபடுத்தி உள்ளனர். நேற்று (ஆக., 15ல்) நாக சதுர்த்தியை முன்னிட்டு, மஹா பாலாபிஷேக திருவிழா நடந்தது. இதில், சின்னதக் கேப்பள்ளி, பெரியதக்கேப்பள்ளி, பழைய ஊர், மாளகுப்பம், கரடிகுறி, பூசாரிப்பட்டி, கல்லகுறி, போத்திநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து நாகம்மா கோவிலுக்கு வந்தனர். அங்கு நாகம்மாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பெண்கள் தாங்கள் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு ஊற்றி, தங்கள் வேண்டுதலை நிறை வேற்றினர். நிகழ்ச்சியில் கரகாட்டம், கோலாட்டம் போன்றவை நடந்தன. தொடர்ந்து பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சுப்பிரமணி, முனிலட்சுமி, நேத்ராவதி, சர்வேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.