திருத்தணி:திருத்தணி, அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, 7ம் தேதி ஜாத்திரை துவங்கியது. அன்று, மூலவர் அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
கடந்த, 13ம் தேதி, ஜாத்திரையையொட்டி, காலையில் கூழ் வார்த்தல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று (ஆக., 15ல்), ஜாத்திரை நிறைவையொட்டி, விடையாற்றல் நிகழ்ச்சி நடந்தது.இதையொட்டி, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.இத்துடன் நடப்பாண்டிற்கான ஜாத்திரை நிறைவடைந்தது.