பதிவு செய்த நாள்
17
ஆக
2019
01:08
பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டியில் எழுபது ஆண்டுகளுக்கு முன் பாலசுப்பிர மணிய சுவாமி கோயிலில் ‘வாழ்வின் ஒளி’ வள்ளலார் சிதம்பரம் ராமலிங்கம் படம் வைத்து அருட்பா பஜனை செய்து துவங்கப்பட்டது. சத்தியஞான சபையால் 2009ல் வள்ளலாருக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரு ங்கருணை வடிவில் தீபம் ஒளி வீசிக்கொண்டு இருப்பதே தனிச்சிறப்பு.
இயற்கையின் நடுவே அமைந்த இந்த கோயிலில், சிந்தனைகளை ஒன்றாக்கி தியானம் செய்து ஒளியை பார்க்கும்போது, கனத்த மனமும் கரைந்து லேசாகி, மனது தூய்மைப் படுகிறது. யாருக்கும் தீமை செய்யாது அன்பே சிவம் என்ற ஆனந்த அலை உணர்வுகளின் வெளி ப்பாடாகிறது என அங்கு தியானம் செய்யும் பலரும் ஒரேகுரலில் கூறுகின்றனர்.
‘அன்பை மட்டும் விதைத்தால் ஆனந்தத்தை அறுவடை செய்யலாம்’ என்ற சொல்லாட லுக்கு ஏற்ப தினமும் நூறு பேருக்கு அன்னதானம் நடந்து வருகிறது. தினமும் காலை, மாலையில் மூன்று நேரம் பூஜை நடக்கிறது. அக். 5ம் தேதி வள்ளலார் பிறந்தநாளில் அவரது படத்துடன் வீதி உலாவும், வடுகபட்டி பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி, நோட்டு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
தைப்பூசத்திருவிழாவில் ஜோதிதரிசனம், ஆன்மிகச் சொற்பொழிவு, அன்னதானமும், மாதம் தோறும் பூசநட்சத்திரத்தில் காலை, மாலையில் அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, மாதம் இரண்டாம் சனிக்கிழமையன்று சொற்பொழிவும் நடக்கிறது. கோயிலுக்கு அருகே கட்டப்பட்ட தியான மண்டபம் திறக்கப்பட உள்ளது. நன்கொடையாளர்கள் நிதி கொடுத்து உதவுகின்றனர். ஏற்பாடுகளை வள்ளலார் குழுத்தலைவராக முருகேசன், செயலாளர் வீரபத்திரன், பொருளர் வாசுமணி, கல்வி மற்றும் கட்டடக்குழு அறக்கட்டளை தலைவர் நல்லாசிரியர் வைகுண்டம், பூஜாரி சோமநாதன் உட்பட சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை ஒருங்கிணைப்பு குழுவினர் செய்து வருகின்றனர். தொடர்புக்கு: 99947 77143