Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பதவி உயர்வு விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) எதிர்பாராத பணவரவு மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) பிள்ளைகளால் பெருமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2019
13:28

புதன் ஆக.21 வரை சாதகமான இடத்தில் இருப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,  பெருமையும் கிடைக்கும். அதன் பிறகு புதன் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார் என்று கவலைப்பட வேண்டாம் காரணம் அவர் செப்.7ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். சுக்கிரன் செப்.1 வரை சாதகமான இடத்தில் இருக்கிறார். குருபகவான்  12-ம் இடத்தில் இருப்பது சுமாரான நிலையே. இங்கு அவரால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும்.

பொருளாதார வளம் சிறப்பாக இருந்தாலும் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். சூரியனால் மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. புதனால் ஆக.21க்கு பிறகு சிலர் பொல்லாப்பை சந்திக்க வேண்டியதிருக்கும். எனவே வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மகிழ்ச்சி மனதில் குடியிருக்கும். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். குறிப்பாக ஆக.26,27ல் அவர்களால் பணஉதவி கிடைக்கும்.  விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப். 3,4ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஆக.18,19,20, செப்.15,16ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். செப்.7க்கு பிறகு கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். பெண்களால் பொன், பொருள் சேரும்.

பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். புதனின் பலத்தால் நன்மை உண்டாகும். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். வேலையில் உங்களின் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். ஆக.21 க்கு பிறகு வேலையில் பணிச்சுமையும், அலைச்சலும் இருக்கும். ஆனால் சுக்கிரனின் பலத்தால் நிலைமை சீராகும். செப்.1,2 எதிர்பாராத நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். செப்.7 க்கு பிறகு சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். தீயோர் சேர்க்கையால் அவதிபட்டவர்கள் அதில் இருந்து விடுபடுவர்.

வியாபாரிகள் சிறப்பான நிலையில் இருந்தாலும் இந்த மாதம் ஆக.21 முதல் செப்.7 வரை அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே மற்றவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.

கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். செப்.7க்கு பிறகு எதிரியால் தொல்லை அதிகரிக்கும்.
மறைமுகப்போட்டிகள் அதிகம் இருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்காலத்தில் அதற்கான பலன் கிடைக்கும்.

மாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண்பர். ஆக.21 முதல் செப்.7 வரை கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதிருக்கும். அதன் பிறகு புதன் பக்கபலமாக இருப்பதால் முன்னேற்றம் காண்பர். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.  

விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் பெருகும்.   புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்துக் கொள்ளவும்.

பெண்களுக்கு  கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைக் காண்பர். பணியிடத்தில் உங்களின் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுய தொழில் செய்யும் பெண்கள் அதிக வருமானம் கிடைக்கப் பெறுவர். ஆக.21க்கு பிறகு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். செப்.7,8,9ல் அதிர்ஷ்டவசமாக நன்மையை எதிர்பார்க்கலாம். விருந்து. விழா என சென்று வருவீர்கள். சகோதரவழியில் பண உதவி கிடைக்கும். செப்.12,13,14ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம். சனிபகவானால்  வெளியூரில் தங்க நேரிடும். மின்சாரம், நெருப்பு தொடர்பான பணியாளர்கள்  சற்று கவனமாக இருக்கவும்.

* நல்ல நாள்: ஆக.23, 24, 25,26,27, செப்.1,2,3,4, 7,8,9,12,13,14  
* கவன நாள்: ஆக.28,29 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,6
* நிறம்: பச்சை, வெள்ளை

பரிகாரம்:
●  செவ்வாய்கிழமையில் முருகன் தரிசனம்
●  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்
●  சதுர்த்தியன்று விநாயகர் கோயில் வழிபாடு

 
மேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »
temple
பொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு ... மேலும்
 
temple
இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.