பதிவு செய்த நாள்
17
ஆக
2019
02:08
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த, அத்திவரதர் சிறப்பு தரிசனத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று (ஆக., 16ல்) அத்திவரதர் தரிசனம் மற்றும் மகா சுதர்சன ஹோமம் நிகழ்ச்சி மங்கள இசையுடன் துவங்கியது.
மாலை, 5:00 மணிக்கு விக்னேஸ்வரர் ஆராதனம், சங்கல்பம், கலச ஸ்தாபனம், பாராயணம், பெரிய சாற்று முறை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதன்பின், அத்திவரதர் தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் வரிசையில் காத்தி ருந்து மனமுருகி வேண்டினர். விழாவையொட்டி உற்சவ மூர்த்தியான பார்த்தசாரதி பெரு மாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வேணுகோபால சுவாமிகள் மற்றும் வரத சம்பத்குமார், நிகழ்ச்சிக்கு தலைமையேற்று பூஜை கள் நடத்தினர். தொடர்ந்து இன்று (17ம் தேதி) காலை, 7:00 மணி முதல் அத்திவரதர் தரிசனம் நடக்கிறது. கோ பூஜை, திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு காயத்ரி, சுதர்சன, நரசிம்மர், தன்வந்திரி ஹோமம், 108 திவ்யதேச காயத்ரி ஹோமம் நடக்கிறது. பூர்ணாகுதி பூஜை, சொற்பொழிவும் நடக்கிறது.