மங்கலம்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2019 02:08
மங்கலம்பேட்டை: சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில் நடந்த பால்குட ஊர்வலத்தில், ஏராளமானோர் பால்குடம் சுமந்து, ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மங்கலம்பேட்டை அடுத்த சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில் நேற்று (ஆக., 16ல்) பால்குட ஊர்வலம் நடந்தது. காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, காலை 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு நடந்த பால்குட ஊர்வ லத்தில் ஏராளமானோர் பால்குடம் சுமந்து, ஊர்வலமாகச் சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 8:00 மணிக்கு நடந்த திருவிளக்கு பூஜையில் சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.