பதிவு செய்த நாள்
19
ஆக
2019
03:08
வாலாஜாபாத்: அத்தி வரதர் வைபவத்தை ஒட்டி, புள்ளலுார் ஊராட்சியில், 500 அத்தி மரக்கன்று களை, வட்டார வளர்ச்சி அலுவலர் நட்டார்.காஞ்சிபுரத்தில், அத்தி வரதர் வைபவம், ஜூலை, 1ம் தேதி துவங்கி, 17ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்த வைபவத்தை போற்றும் விதமாக, ஊராட்சி தோறும் அத்தி மரங்கள் நட வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர், ஊரக வளர்ச்சித் துறைக்கு, உத்தரவிட்டு இருந்தார்.இதையடுத்து, வாலா ஜாபாத் ஒன்றியம், புள்ளலுார் ஊராட்சியில், அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், 500 அத்தி மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கினார்.ஊரக வளர்ச்சி துறையினர் மற்றும் 100 நாள் பணியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.