பதிவு செய்த நாள்
21
ஆக
2019
02:08
திருப்பூர்:திருப்பூர் அருகே செட்டிபாளையம் கிராமம், கூத்தம்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவில், கும்பாபிஷேக விழா, வரும், 25ம் தேதி நடக்கிறது.கோவிலில், கும்பாபிஷேக விழா, 23ம் தேதி காலை, 7:00 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாட்டுடன் துவங்குகிறது. மகா கணபதி ஹோமம், மகா தீபாராதனை, கோபூஜை நடக்கிறது. மாலை முளைப்பாரி ஊர்வலம், தீர்த்தக்குடம் எடுத்துவரும் நிகழ்ச்சியும், முதல்கால யாக பூஜையும் நடக்கிறது.
இரண்டாம் கால யாக பூஜை, கோபுர கண் திறப்பு, கலசங்கள் வைத்தல், மூன்றாம் கால யாக பூஜைகள், 24ம் தேதி நடக்கிறது. நான்காம் கால பூஜை, நாடி சந்தானம், பூர்ணாஹூதி, தீபாரா தனையுடன், 25ம் காலை, 6:00 மணிக்கு, கலசங்கள் புறப்படுகின்றன.அன்று, காலை, 8:10 மணி க்கு, ஸ்ரீமாகாளியம்மன் கோபுர கும்பாபிஷேகமும், தொடர்ந்து, விநாயகர், மாகாளியம்மன் கும் பாபி ஷேகம், மகா அபிஷேகம், அலங்காரபூஜைகள் நடக்கின்றன.
அதனை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படும்.பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் உத்தமலிங்ககேஸ்வர சிவம் தலைமையிலான குழுவினர், கும்பாபிஷேக சர்வ சாதக பூஜைகளை நிகழ்த்துகின்றனர். கும்பாபி ஷேக விழா ஏற்பாடுகளை, அன்னையம் பாளையம், ஒட்டபாளையம், கூத்தம்பாளையம் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.