பதிவு செய்த நாள்
22
ஆக
2019
01:08
ஊத்துக்கோட்டை : விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, ரசாயன கலவையில் விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறதா என, வருவாய், காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அடுத்த மாதம், 2ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான விநாயகர் சிலைகள் செய்ய கோலக்கல் மாவு, கிழங்கு மாவு உள்ளிட்ட பொருட்கள் கலந்து செய்வர். சிலர், ரசாயனக் கலவையுடன் வெவ்வேறு வடிவங்களில் சிலை செய்து, விற்பனை செய்வர்.
இதுபோன்று ரசாயனக் கலவையுடன் செய்யும் விநாயகர் சிலைகள் தண்ணீரில் கரைவதி ல்லை. இதனால், தண்ணீர் மாசுபடுகிறது. ஊத்துக்கோட்டையில், ரசாயனக் கலவையுடன் கூடிய விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது என, கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஊத்துக்கோட்டை தாசில்தார், போலீசார், ஊத்துக்கோட்டைபஜார், நாகலாபுரம் சாலை ஆகிய இடங்களில்விநாயகர் சிலைகள் செய்யும் இடங்களுக்குச் சென்று, ஆய்வு மேற்கொண்டனர். ரசாயன கலவையுடன் கூடிய சிலைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்தனர்.