பதிவு செய்த நாள்
22
ஆக
2019
01:08
சேலம்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்(இஸ்கான்), சேலம் கிளை வெளியிட்டுள்ள அறிக்கை: எங்கள் இயக்கம் சார்பில், சேலம், சோனா கல்லூரி மைதானத்தில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, ஆக., 23ல்(நாளை) கொண்டாடப்படவுள்ளது.
காலை, தொடங்கும் விழாவில், பஜனை, உபன்யாசங்கள், இஸ்கான் திரைப்படம், சென்னை பிரபு பாதர் தியேட்டர்ஸ் குழுவினரால், ’கிருஷ்ண லீலா’ நாடகம் நடக்கவுள்ளது. கிருஷ்ண பலராமரின் விக்கிரமங்களுக்கு, அலங்காரம் செய்து, ஆரத்தி, கீர்த்தனம்; இரவு, கிருஷ்ண பலராமருக்கு, மஹா அபிஷேகம், ஆரத்தி நடக்கவுள்ளது. பக்தர்களுக்கு, பிரசாத விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்மிக புத்தக நிலையங்கள், பிரசாத ஸ்டால், கோவில் கட்டுமானப் பணி ஸ்டால், கேள்வி பதிலுக்கு பந்தல் முதலியவை இடம்பெறும். மக்கள், கிருஷ்ணரின் கருணையை பெறுவதற் காக, விழா ஏற்பாடுகளை, இஸ்கான் நிர்வாகம் செய்துள்ளது. அதேநேரம், கோவில் திருப்பணி நடந்து வருவதால், அன்று, கருப்பூர் ஹரே கிருஷ்ணா கோவிலில் தரிசனமோ, நிகழ்ச்சியோ இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.