பதிவு செய்த நாள்
24
ஆக
2019 
02:08
 
 விருதுநகர் : ”விநாயகர் சதுார்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் 13  இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக,” கலெக்டர்  சிவஞானம் கூறினார்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுார்த்தி ஊர்வலம்  முன்னேற்பாடு ஆலோச னை கூட்டம் நடந்தது. எஸ்.பி.,ராஜராஜன் முன்னிலை  வகித்தார். தலைமை வகித்த கலெக்டர் சிவஞானம் தெரிவித்ததாவது: ரசாயன  வர்ணம் பூசப்படாத களிமண், கிழங்கு மாவு மூல பொருட்களால் செய்யப்பட்ட  விநாயகர் சிலைகள் மட்டும் பூஜித்து கரைக்க அனுமதிக்கப்பட் டுள்ளது.
சிலைகளை கரைக்க விருதுநகர் கல் கிடங்கு, ஆவுடையாபுரம் கிணறு, சிவகாசி  தெய்வானை நகர் கிணறு, மடவார் வளாகம் கண்மாய், அருப்புக்கோட்டை பெரிய  கண்மாய், பந்தல்குடி பெரிய கண்மாய், ராஜபாளையம் வடுகவூரணி, சாத்துார்  தெப்பம், கிணறு, ஆலங்குளம் குவாரி, திருவண்ணாமலை கோனகிரி குளம்,  ராமச்சந்திராபுரம் கண்மாய், குன்னுார் கண் மாய், மகாராஜபுரம் கூமாபட்டி  பெரியகுளம் கண்மாய் என 13 இடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளது, என்றார்.  டி.ஆர்.ஓ., உதயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.