வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தையொட்டி நேற்று உறியடி உற்சவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு 23ம் தேதி முதல் வரும் 1ம் தேதி வரையில் சத்தியபாமா ருக்குமணி சமேத கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெறுகிறது.நேற்று காலை வெண்ணை தாழி கிருஷ்ணர் வீதியுலாவும், மாலை 7:00 மணிக்கு மேல் உறியடி உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. வரும் 1ம் தேதி வரையில் காலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவு சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் ராமதாஸ் மற்றும் உற்சவதாரர்கள் செய்துவருகின்றனர்.