அருளொளி விநாயகர் கோயில் சதுர்த்தி விழா காப்பு கட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2019 03:08
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வழுதுார் அருளொளி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.இங்கு சதுர்த்தி விழாவை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு காப்புகட்டும் நிகழ்ச்சி நடந்தது.ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டினர். பின் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள்நடந்தது. தொடர்ந்து பத்து நாட்கள் பக்தர்களின் உபய சிறப்பு பூஜைகள் நடக்கிறது.செப்., 2ல் பக்தர்கள் பால்குடம் எடுக்கின்றனர். விநாயகப்பெருமானுக்கு பாலபிேஷகம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது. அன்று மாலை 6:00 மணிக்கு மகளிர் குழு சார்பில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.