பதிவு செய்த நாள்
27
ஆக
2019
02:08
தி.நகர்: ’ரீச் பவுண்டேஷன்’ சார்பில், தமிழ் கல்வெட்டுகள் தொடர்பான பயிற்சி வகுப்புகள், நேற்று, தி.நகரில் துவங்கின.’ரீச் பவுண்டேஷன்’ சார்பில், தமிழ் கல்வெட்டுகள் தொடர்பான பயிற்சி வகுப்புகள், தி.நகர், பர்கிட் சாலையில் உள்ள, ராமகிருஷ்ணா பள்ளியில், நேற்று 26ல், காலை நடந்தது.இந்த வகுப்புகள், இனி வரும், 15 ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளன. பயிற்சி வகுப்புகள் மட்டுமின்றி, களப்பணிகளும் நடைபெற உள்ளன.
வகுப்புகளை, தமிழ்நாடு தொல்லியல் துறையின், ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர், எஸ்.ராமச் சந்திரன் நடத்துகிறார். காலை, 8:30 மணி முதல், 11:00 மணி வரை நடைபெறும் பயிற்சி வகுப்புகளுக்கு, 3,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது குறித்து, ’ரீச் பவுண் டேஷன்’ தலைவர், டி.சத்தியமூர்த்தி கூறியதாவது:அனைவரும் கல்வெட்டை படிக்க வேண்டும் என்ற நோக்கில், இந்த பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டு ள்ளன. இது, 12வது பயிற்சி வகுப்பு. இதுவரை, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்வெட்டு களை எங்ஙனம் படிப்பது, என்பது குறித்து பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவில், உள்ள கல்வெட்டுகளில், 60 சதவீதம் தமிழ் கல்வெட்டுகள். இதில், 50 சதவீதம் கல்வெட்டுகள் மட்டுமே, பிரசுரமாகி உள்ளன.
கல்வெட்டை பாதுகாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.மக்களுக்கு, கல்வெட்டை படிக்க தெரிந்தால் மட்டுமே, அதை பாதுகாப்பர். கல்வெட்டுகள் பாதுகாக்கப்பட்டால், கோவில் கள் பாதுகாக்கப் படும்.இவ்வாறு, அவர் கூறினார்.