பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் துறவி லட்சுமிபாய் கோவிலில், மயிலாடு துறை பரப்பிரம்ம சித்தர் சுவாமிகளின் குருபூஜை படையல் விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு, 60 வாழை இலைகளில் படையல் வைக்கப்பட்டது. குரு பூஜை படையலை, ஓங்காரனந்தா சுவாமிகள் துவக்கி வைத்தார். படையல்செய்த இலைகள் பக்தர்களுக்கு, அன்ன தானமாக வழங்கப்பட்டது. விழாவில், ஓங்காரனந்தா ஆசிரம அதிபர் கோடீஸ்வரா நந்தா சுவாமிகள், சீனு என்கிற ராமதாஸ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.