பழநி: பழநி முருகன்கோயில் தங்கத்தொட்டில் அறை, பக்தர்கள் வசதிக்காக புதிதாக மாற்றும் பணி நடக்கிறது.
பழநி முருகன் கோயிலில் வெளிப்பிரகாரம் தென் மேற்கு பகுதியில் தங்கத்தொட்டில் நிலை யம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளை தங்கத்தொட்டிலில் இட்டு தாலாட்ட அனுமதிக்கப் படுகின்றனர். பஞ்சாமிர்தம் விபூதி பிரசாதம் வழங்கப்படும்.
தங்கத்தொட்டில் உள்ள அறையில் ‘ஏசி’ பொருத்தப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. பக்தர் களை மகிழ்ச்சிப்படுத்த வண்ண சுவாமி படங்களின் பிளக்ஸ் ஒட்டப்பட்டு அறை புதுப்பிக்கப் படுகிறது. தினமும் 50 பேர் வரை, விழாக்காலங்களில் ஏராளமான பக்தர்கள் குழந்தைகளை தங்கதொட்டி லில் இட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.