துாத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா, 8ம் நாளான நேற்று 27ம் தேதி பகலில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா நடந்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத் துடன் துவங்கியது. இத்திருவிழாவின், 8ம் நாளான நேற்று 27ம் தேதி அதிகாலை சுவாமி சண் முகர் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்தை சேர்ந்தார். அங்கு சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம், அலங் காரம் தீபாராதனை நடந்தது. பின்னர் பச்சை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித் தார். பகல் 11.50 மணிக்கு சுவாமிக்கு மகாதீபாராதனை ஆனதும் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி சப்பரத்தில் வீதி உலா வந்தார். தேரோட்டம் நாளை (29ம் தேதி)காலை நடக்கிறது.