திருப்புவனம் : கீழடி அகழாய்வில் சுடுமண் குழாய் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் நீதியம்மாள் நிலத்தில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது. இதில் இரண்டு அடி ஆழத்தில் சிறிய அளவிலான ஒரு மீட்டர் நீளத்தில் குழாய் போன்ற வடிவமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. 8 இஞ்ச் சுற்றளவு கொண்ட 11 வளையங்களை கொண்டதாக இந்த குழாய் அமைந்துள்ளது. குழாயின் அருகிலேயே செங்கல் கட்டுமானமும் கண்டறியப்பட்டுள்ளது.
குழாய் அமைப்பின் பயன்பாடு குறித்து தெளிவாக தெரியவில்லை. தண்ணீர் செல்லும் குழா யாக இருந்திருந்தால் இதன் தொடர்ச்சியும் அருகிலேயே இருக்க வாய்ப்புண்டு, தொல்லி யல் ஆய்வாளர்கள் கூறியதாவது: மத்திய தொல்லியல் துறையின் 2ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்திற்கும் தற்போது குழாய் கண்டறிந்துள்ள இடத்திற்கும் 20 மீட்டர் துாரம் தான் உள்ளது. மத்திய அரசின் 2ம் கட்ட அகழாய்வின் போது செங்கல் கட்டுமானம் கொண்ட தொழிற்சாலை போன்ற அமைப்பு கண்டறியப்பட்டது. எனவே அதனுடைய தொடர்ச்சியாக இருக்க வாய்ப் புள்ளது. மண்ணால் செய்யப்பட்ட குழாயை சுட்டு பயன்படுத்தியுள்ளனர். சிறிதளவு சேதத் துடன் இந்த குழாய் போன்ற அமைப்பு கிடைத்து உள்ளது என்றனர்.