ஆர்.எஸ்.மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2019 02:08
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடி முத்துமாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. முன்னதாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். இரவில் பெண்களின் கும்மியாட்டம், இளைஞர்களின் ஒயிலாட்டம் நடந்தது.
பின், முளைப்பாரிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஊர்வலமாக எடுத்து சென்ற பக்தர் கள் நீரில் கரைத்து நேர்த்திகடன் நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை வாணியக்குடி கிராம த்தினர் செய்திருந்தனர்.