ஊட்டி:ஊட்டி அருகே அப்புகோடு பகுதியில் உள்ள ஆனந்தமலை முருகன் கோவிலில் மாதாந்திர கிருத்திகை பூஜையொட்டி, காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு விநாயகருக்கு அலங்கார பூஜை, நவகிரக தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது, ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமசந்திரன் செய்திருந்தார்.