கடலுார் மாவட்டத்தில் 1,250 இடங்களில் விநாயகர் சிலை விஜர்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2019 02:08
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 1,250 இடங்களில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா செப் 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, கடலுார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.அதன்படி, மாவட்டத்தில் உள்ள கடலுார், சிதம்பரம், பண்ருட்டி, திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட ஏழு கோட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 1,250 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
அனைத்து இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விநாயகர் சிலைகள் வைப்பதற் கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் 1ம் தேதி முதல் சிலைகள் வைக்கப்படும்.