அரூரில் மக்கள் நலமுடன் வாழ ஆயுள் அபிவிருத்தி ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2019 03:08
அரூர்: மக்கள் நலமுடன் வாழவும், மழை வேண்டியும், அரூரில் ஆயுள் அபிவிருத்தி ஹோமம் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில், நேற்று 30ல், காலை, 9:00 மணிக்கு மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ ஆயுள் அபிவிருத்தி ஹோமம், பிரத்தியங்கா ஹோமம் மற்றும் கணபதி ஹோமம் நடந்தது. இதில், ஏராளமான மக்கள் பங்கேற்றனர். 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.