விநாயகர் சன்னதியில் உடலை முன்புறமாக சாய்த்து நின்று, வலக்கையை இடது பொட்டிலும், இடக்கையை வலது பொட்டிலும் வைத்து மூன்று முறை குட்டுங்கள். பின்னர் இதே முறையில் காதுகளை பிடித்து மூன்று முறை தோப்புக்கரணம் இடுங்கள். பிறகு விநாயகர் ஸ்லோகம் சொல்லிய படி சன்னதியை சுற்றுங்கள். வீட்டிலும் இதே முறையை பின்பற்றுங்கள். புனே மார்க்கெட் பகுதியில் ’தகடுசேட் கணபதி’ கோயில் உள்ளது. இங்கு விநாயகருக்கு படைக்கும் பொரி, தீர்த்தத்தை பக்தர்களே எடுத்துக் கொள்ளலாம். இப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களை சேர்ந்தோர் பத்தில் ஒரு பங்கு லாபத்தை காணிக்கையாக இவருக்கு செலுத்துவர்.