Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நின்னைச் சரணடைந்தேன் மனமே விழித்தெழு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நெல் குத்தி சுவாமி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
03:09

திண்டிவனம் அருகிலுள்ள தீவனூர் கிராமத்தில் நெல்குத்தி விநாயகர் குடியிருக்கிறார். கணபதி லிங்கம் எனப்படும் இவர் தீபாராதனையின் போது மட்டும் விநாயகர் வடிவத்தில் காட்சியளிப்பார். செஞ்சி பகுதியை தேசிங்கு ராஜா ஆட்சி செய்த காலம் அது. அப்போது ஆடு மேய்க்கும் சிறுவர்கள் சிலர், வயலில் விளைந்திருந்த நெற்கதிர்களை திருடி ஓரிடத்தில் குவித்தனர். கற்களை எடுத்து நெல்லைக் குத்தி அரிசியாக்கி கொண்டனர். ஒருநாள் நெல் குத்த சரியான கல் அவர்களுக்கு கிடைக்கவில்லை. நீண்ட தேடலுக்குப் பின் சிறுவன் ஒருவன், யானை முகம் கொண்ட கல் ஒன்றை கண்டான். அது நெல் குத்த பயன்படாது என அனைவரும் கூறியதால் நெற்கதிர்களை அங்கேயே வைத்து விட்டு வேறு கல்லைத் தேடிச் சென்றனர். திரும்பிய போது, நெல் குத்தப்பட்டிருப்பது கண்டு அதிசயித்தனர்.

”இது சாதாரண கல் இல்லை! நெல் குத்தி சுவாமி! இதை பத்திரப்படுத்த வேண்டும்” என ஓரிடத்தில் மறைத்தனர். மறுநாள் கல்லைக் காணவில்லை. அப்போது குளத்தில் தண்ணீர் கொப்பளித்ததைக் கண்டனர். அந்த இடத்திற்குள் கல் கிடக்கவே, அதை எடுத்து மீண்டும் பத்திரப்படுத்தினர்.  

இந்நிலையில் விவசாயிகள் நெற்கதிர்கள் திருட்டு போவது குறித்து வருந்தினர். பெரிய தனக்காரரான ஏகாம்பர கவுண்டரிடம் புகார் செய்தனர். விசாரணையில் சிறுவர்கள் சிலர் நெற்கதிர்களை திருடுவதும், யானை வடிவ கல் ஒன்றில் நெல்லை குத்துவதும் தெரிய வந்தது. அன்றிரவு பெரிய தனக்காரரின் கனவில் விநாயகர் தோன்றி, நெல் குத்தி கல்லாக தான் இருப்பதை தெரிவித்து கோயில் கட்ட உத்தரவிட்டார். பெருமாள் பக்தரான அவருக்கோ இதில் உடன்பாடு இல்லை. ’கடவுள் ஒருவரே; அவரே வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறார்’ என பகவத்கீதையின் மேற்கோள் ஒன்றை உறவினர் ஒருவர் எடுத்துச் சொல்லி,  கோயில் கட்டும் பணியில் ஈடுபடுத்தினார்.  

ஒருமுறை இக்கோயிலின் பூஜாரி மிளகு வியாபாரி ஒருவரிடம் நைவேத்யத்திற்கு கொஞ்சம் மிளகு தருமாறு வேண்டினார். விரும்பாத வியாபாரி தன்னிடம் உளுந்து இருப்பதாக பொய் சொல்லி விட்டு சந்தைக்குச் சென்றார். அங்கு மிளகு மூடை, உளுந்து மூடையாக மாறி இருந்தது. தவறை உணர்ந்த வியாபாரி விநாயகரை சரணடைந்து மன்னிப்பு கேட்டார். பொய் சொன்னதை தடுத்ததால் ’பொய்யாமொழி விநாயகர்’ என பெயர் பெற்றார். கோயிலின் பின்புறம் உள்ள விழுது இல்லாமல் மூன்று ஆலமரங்கள் உள்ளன.  திருமணம், குழந்தை பாக்கியம், மன அமைதி பெற வேண்டி பக்தர்கள் இவற்றை சுற்றுகின்றனர்.

* எப்படி செல்வது?
திண்டிவனம் - -– செஞ்சி வழியில் 12 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar