பதிவு செய்த நாள்
03
செப்
2019
03:09
இடைப்பாடி: விநாயகர் சதுர்த்தி நாளான நேற்று, 322 சிலைகள் கல்வடங்கம், பூலாம்பட்டி காவிரியாற்று பகுதிகளில் கரைக்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில், விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் கடுமையான விதிமுறைகள் விதித்திருந்தனர். சிலையை வைத்து ஊர்வலம் நடத்தக்கூடாது, கீற்று கொட்டகை அமைக்கக் கூடாது, தகர கொட்டகை மட்டுமே அமைக்க வேண்டும். விநாயகர் சிலைகளை மூன்று நாட் களுக்குள், ஆற்றில் கரைத்து விட வேண்டும். சிலை இருக்கும் இடத்தில் அதன் அமைப்பாளர் களே பாதுகாக்க வேண்டும் என, பல்வேறு கெடுபிடிகளை விதித்திருந்தனர். இந்த கெடுபிடியால், முதல் நாளிலேயே நேற்று 2ம் தேதி மாலை, 6:00 மணி வரை கல்வடங்கம் காவிரி ஆற்றில், 179 சிலைகள், பூலாம்பட்டி காவிரி ஆற்றில், 137 சிலைகள், பில்லு குறிச்சி வாய்க்காலில் ஆறு சிலைகள் என, 322 விநாயகர் சிலைகள் கல்வடங்கம், பூலாம்பட்டி பகுதிகளில் கரைக்கப்பட்டன.