பதிவு செய்த நாள்
03
செப்
2019
04:09
திருவண்ணாமலை: விநாயகர் சதுர்த்தி விழாவில், திருவண்ணாமலை மாவட்டத்தில், 1,650 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மக்கள் அவல்பொரி, பழ வகைகள், சோளம், பூ, பூஜை பொருட்களை வாங்க, திருவண்ணாமலை கடைவீதியில், பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால், கடை வீதியில் காணும் இடமெல்லாம், மக்களின் தலையாகவே காட்சியளித்தது.
சாலையோரத்தில் விற்கப்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான, விநாயகர் சிலைகளை, பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். இந்து அமைப்பினர், இளைஞர்கள் தங்கள் பகுதிகளில், சதுர்த்தியை கொண்டாட, மூன்று அடி முதல், 12 அடி வரை உள்ள விநாயகர் சிலைகளை வாங்கி சென்றனர். மாவட்டம் முழுவதும், 1,650 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பாதுகாப்பு பணியில், 1,500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில், தங்கக்கொடி மரம் அருகில் உள்ள சம்மந்த விநாயகருக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மாட வீதியில் உள்ள இரட்டை பிள்ளையார் கோவிலில், சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
* விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் மாவட்டத்தில், பலர் புதுமையான முறையில் விநாயகர் சிலைகளை அமைத்துள்ளனர். ஆம்பூர், கிருஷ்ணாபுரம் புதுத்தெருவில், சோளம், கம்பு, கேழ்வரகு, பச்சைப்பயறு, கோதுமை, நெல், மொச்சை போன்ற தானிய வகைகளால், ஏழு அடி பசுமை விநாயகர் சிலை, அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வடிவமைத்து ள்ளனர். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், வடிவமைக்கப்பட்ட இந்த பசுமை விநாயக ருக்கு வரவேற்பு கூடியுள்ளது. அதே போல, வேலூர் சைதாப்பேட்டை கன்னாரதெருவை சேர்ந்தவர் கோபி, 34. இவர், 70 கிலோ எடைக்கு பழைய செய்தித்தாள்களை கொண்டு, 12 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார். எளிதில் கரையும் தன்மையுள்ள இந்த சிலையை செய்ய, மூன்று நாட்கள் ஆனதாம். கிழங்குமாவை கொண்டு வண்ணம் தீட்டப் பட்டுள்ள, இந்த விநாயகர் சிலையை ஏராளமான மக்கள் பார்த்துச் சென்றனர்.