பதிவு செய்த நாள்
03
செப்
2019
04:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், 250 ரசாயன விநாயகர் சிலைகளை தாசில்தார் அமுலு தலைமையிலான வருவாய் துறையினர் கண்ட றிந்து, அதை வழிபாட்டுக்கு வைக்க தடை விதித்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, பிளாஸ்டர் ஆப்-பாரிஸ், ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரிக்கவோ, விற்கவோ அல்லது வாங்கி பிரதிஷ்டை செய்யவோ கூடாது. இவ்வாறு செய்த விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க, கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந் திருந்தது.
இந்நிலையில், நேற்று 2ல், திருவண்ணாமலை தாசில்தார் அமுலுவுக்கு பிளாஸ்டர் ஆப்-பாரிஸ் கொண்டு செய்த விநாயகர் சிலைகள், ஆங்காங்கே வைக்கப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து அவர், திருவண்ணாமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அப்போது, தடை செய்த பொருட்களால் செய்யப்பட்ட, 250 விநாயகர் சிலைகள் இருப்பதை கண்டறிந்தார். அவற்றை பயன்படுத்தக்கூடாது என எச்சரித்து, வேறு சிலைகளை வைக்க அறிவுறுத்தினார். மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சம்மந்தப்பட்டவர்களை எச்சரித்தார்.