பதிவு செய்த நாள்
04
செப்
2019
02:09
மேட்டூர்: மேட்டூரில், விநாயகர் சிலையுடன், பெண்கள் ஆற்றில் இறங்க தடை விதிக்கப் பட்டது. விநாயகர் சதுர்த்தி முடிந்த நிலையில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்து, திரளான பக்தர்கள், நேற்று 3ம் தேதி, காவிரியில் கரைக்க, சிலைகளை, மேட்டூர் கொண்டு வந்தனர்.
அவர்கள் வந்த வாகனம், மேட்டூர் மின்வாரிய பணிமனை முனையில் நிறுத்தப்பட்டது. அங்கி ருந்து, சிலைகளை காவிரி பாலம் வரை, பக்தர்கள் தூக்கிச்சென்றனர். அங்கு, போலீசார் வரிசைப்படி, காவிரியாற்றில் இறக்கி, ஒவ்வொரு சிலைகளாக கரைக்க அனுமதித்தனர்.
வழக்கமாக, சிலைகளுடன் பெண் பக்தர்கள், காவிரியாற்றில் இறங்குவர். ஆனால், நேற்று 3ம் தேதி, பெண்கள் இறங்க, போலீசார் தடை விதித்து, கரையிலேயே நிறுத்தினர். மேலும், நீச்சல் தெரிந்தவர்களை மட்டுமே, சிலையுடன் ஆற்றில் இறங்க, போலீசார் அனுமதித்தனர். ஒரே நாளில், மேட்டூர், திப்பம்பட்டி, கூணான்டியூர் காவிரி நீர்பரப்பு பகுதியில், 300க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.
3,000 பேருக்கு...: ஆத்தூர், ராணிப்பேட்டை சாலையிலுள்ள, செல்வ விநாயகர் கோவிலில், நேற்று 3ம் தேதி, மூலவர் விநாயகருக்கு, வெள்ளி கவச சாத்துபடி செய்து, சிறப்புபூஜை நடந்தது.
தொடர்ந்து, ராணிப்பேட்டை நண்பர் குழு சார்பில், 3,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியிலுள்ள வெள்ளை விநாயகர் கோவிலில், சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.