பதிவு செய்த நாள்
04
செப்
2019
02:09
ஆர்.கே.பேட்டை:அம்மன் ஜாத்திரை உற்சவத்தில், நேற்று 3ம் தேதி கும்பம் படைக்கப்பட்டது. முன்னதாக, பக்தர்களின் மனம் குளிரும் விதமாக, பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
ஆர்.கே.பேட்டையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை எல்லை பொங்கல் படையலுடன், ஜாத்திரை உற்சவம் துவங்கியது. நேற்று இரவு, முச்சந்தியில் வேப்பிலை குடிலில், கங்கையம்மன் எழுந்தருளினார். திரளான பக்தர்கள், தங்களின் வீடுகளில் அம்மனுக்கு படைக்கப்பட்ட கும்பத்தை வேப்பிலை ஆடை அணிந்து, மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்றனர். முச்சந்தி யில் அம்மனுக்கு கும்பம் மற்றும் மாவிளக்கு படையல் வைத்தனர்.
மூன்று நாட்களாக நடந்து வரும் உற்சவத்தில், இன்று 4ம் தேதி காலை, அம்மனை கங்கை யில் கரைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.இந்நிலையில், பக்தர்களின் மனம் குளிரும் விதமாக, ஆர்.கே.பேட்டையில் மழை கொட்டித் தீர்த்தது. கடும் தண்ணீர் பஞ்சத்தில் இருந்த பொதுமக் களின் வேண்டுதல், இதுவாக தானே இருக்க முடியும்.