பதிவு செய்த நாள்
05
செப்
2019
12:09
சூலுார்: குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சூலுார் அடுத்த, குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. மைசூரு, வெள்ளியங்கிரி, பவானி, மேட்டுப்பாளையம், அவிநாசி உள்ளிட்ட இடங்களில் இருந்து, புனித நீர் கொண்டு வரப்பட்டு, நேற்று காலை, ஆண்டு விழா பூஜைகள் துவங்கின.காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், கலச பூஜை, பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, தீர்த்த கலசங்கள் கோவிலை வலம் வந்தன. காலை, 11:00 மணிக்கு சவுடேஸ்வரி அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் நடந்தது. கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், சிறுமுகை, சோமனுார் பகுதிகளில் இருந்து வந்த, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அன்னதானம் நடந்தது.