பதிவு செய்த நாள்
05
செப்
2019
01:09
கூடலுார்:கூடலுாரில் விநாயகர் சதுர்த்தி விழா நகர இந்து முன்னணி சார்பில் கொண்டாடப் பட்டது.
புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், சுக்காங்கல்பட்டி, பேச்சியம்மன் கோயில் தெரு, அரசமரம், காலனி உள்ளிட்ட 13 இடங்களில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை கள் நடந்தன. பின்னர் சிலைகளை வாகனங்களில் வைத்து மெயின்பஜார், ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. அனைத்து சிலைகளும் குறுவனத்து அருகே பெரியாற்றில் கரைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேவாரம்: தேவாரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பா.ஜ., மாநில விவசாய அணி செயற் குழு உறுப்பினர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். பா.ஜ., மாவட்ட செயலாளர் சிங்கராஜ் முன்னி லை வகித்தார். தேவாரம், டி.ரெங்கநாதபுரம், தம்மிநாயக்கன்பட்டியிலிருந்து 23 சிலைகள் ஊர்வலத்தில் பங்கேற்றன. தேவாரம் இந்து முன்னணி நகர தலைவர் விஜயக்குமார், பொதுச் செயலாளர் காசி விஸ்வநாத் துரை ஏற்பாடுகளை செய்தனர். சின்னமனுார் அருகே முல்லை பெரியாற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.