கீழக்கரை:ஏர்வாடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று மாலை 4:30 மணிக்கு நடந்தது. வெட்டன்மனை, தொத்தமகன் வாடி, நாச்சியம்மைபுரம், சின்னஏர்வாடி, கல்பார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டிராக்டரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
ஏர்வாடி சுல்தான் செய்யது பாதுஷா நாயகம் தர்கா அருகே வந்த போது ஏர்வாடி தர்கா ஹக் தார்கள் மற்றும் முன்னாள் பொதுமகாசபை தலைவர் துல்கருணை பாட்ஷா லெவ்வை, விநா யகர் சிலைக்கு மாலையணிவித்தும், துண்டு போர்த்தியும் மரியாதை செய்தார்.சின்ன ஏர்வாடி கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் மாலை 6:30 மணிக்கு கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஒவ்வொரு ஆண்டும் ஏர்வாடி தர்கா சார்பில் விநாயகர் ஊர்வலம், கோயில் முளைப்பாரி விழாவில் மரியாதை செய்கின்றனர்.