ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் 40 சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அப்பகுதி மக்கள் விநாயரை வணங்கி சென்றனர். நேற்று 4ல், விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நடந்தது. அனைத்துப்பகுதியில் இருந்து விநாயகர் சிலைகள் மேள தாளத்துடன் ஊர்வலமாக வழி விடு முருகன் கோயில் பகுதியை வந்தடைந்தது.பா.ஜ., மாநில துணைத் தலைவர் குப்புராமு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக சென்று நொச்சியூரணியில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்திற்கு ஓம்பிரகாஷ்மீனா எஸ்.பி., தலைமையில் போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.
*தேவிப்பட்டினம் பகுதியில் இதே போல் 12 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப் பட்டு கடற்கரையில் கரைக்கப்பட்டன.