கம்மாபுரம் அருகே பெரியாண்டவர் கோவிலில் 8ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2019 02:09
கம்மாபுரம் :கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் பெரியாண்டவர் கோவிலில், வரும் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வரும் 5ம் தேதி விக்னேஸ்வர பூஜை, 6ம் தேதி கோ.பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, 7ம் தேதி லட்சுமி ஹோமம், முதற்கால பூஜை, மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும் 8ம் தேதி காலை 5:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நாடிசந்தானம், கடம்புறப்பாடு, காலை 8:30 மணிக்கு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.