பதிவு செய்த நாள்
05
செப்
2019
03:09
விழுப்புரம்:விநாயகர் சதுர்த்திக்காக விழுப்புரம் மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 2,310 விநாயகர் சிலைகள் நீர் நிலைகள் மற்றும் கடலில் கரைப்பதற்காக நேற்று 4ம் தேதி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி, 2,650 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மூன் றாம் நாளான நேற்று 4ம் தேதி , நீர் நிலைகள் மற்றும் கடலில் விஜர்சனம் செய்ய ஊர்வல மாக மதியம் 2:00 மணி முதல் கொண்டு செல்லப்பட்டது.
விழுப்புரத்தில் 356 சிலைகள், திண்டிவனம் 225, செஞ்சி 371, திருக்கோவிலுார் 430, கோட்டக் குப்பம் 113, கள்ளக்குறிச்சி 352, உளுந்துார்பேட்டையில் 463 சிலைகள் மாவட்டத்தில் உள்ள கோமுகி, வீடூர் அணைகள், கைப்பாணிக்குப்பம், எக்கியர்குப்பம், கடலுார் கடலில் கரைக்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
மாவட்டத்தில் மொத்தம் 12 இடங்களில், விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.விநாயகர் சிலை விஜர்சனத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
போலீசாரின் பாதுகாப்பு பணிகளை, வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜன் திடீர் ஆய்வு செய் தார்.பாதுகாப்பு பணிகளில், எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் ஏ.டி.எஸ்.பி., 13 டி.எஸ்.பி. ,க்கள், 35 இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2,780 போலீசார் ஈடுபட்டிருந்தனர். மீதமுள்ள சிலைகள் வரும் 6 அல்லது 8ம் தேதி விஜர்சனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.