பதிவு செய்த நாள்
06
செப்
2019
02:09
சிங்கம்புணரி, :சிங்கம்புணரியில் இந்து முன்னணி மற்றும் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.விநாயகர் சதுர்த்தியையொட்டி சீரணி அரங்கம் அய்யப்பன் கோயில், சந்திவீரன்கூடம், நேதாஜிநகர், வடக்குத்தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
ஊர்வலத்திற்கு சத்தியசீலன் தலைமை வகித்தார். ஐயப்ப குருசாமிகள் முன்னிலை வகித்த னர், மாவட்ட இந்து முன்னணி செயலாளர் போஜராஜன் சிறப்புரை ஆற்றினார். மருத்துவர் அருள் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
சேவுகப்பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டது. விழாக்குழுத் தலைவர் குகன், செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். தேவ கோட்டைதேவகோட்டையில் பல பகுதிகளில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.
அனைத்து பகுதிகளிலிருந்தும் சிலைகள் ஊர்வலமாக சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் வளாகத்திற்கு வந்தது. அனைத்து சிலைகளும் அரசு மருத்துவமனை வழியாக கொண்டு செல்லப்பட்டு கருதாவூரணியில் கரைக்கப்பட்டது.பா.ஜ., தமிழ் வளர்ச்சிக்குழு மாநில தலைவர் முத்துராமன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், பழனியப்பன், பாலகிருஷ்ணன், நகர தலைவர் பஞ்சநாதன், செயலர் சுரேஷ், உட்பட பா.ஜ.,இந்து முன்னணியினர், பங்கேற்றனர்.