பதிவு செய்த நாள்
06
செப்
2019
02:09
சாயல்குடி :-சாயல்குடி அருகே பூப்பாண்டியபுரத்தில்இந்து சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர், பத்திரகாளியம்மன், உஜ்ஜையினி காளியம்மன்,மாரியம்மன் கோயில் உள்ளது.
இங்கு ஆவணி கொடை விழா ஆக.,27 (செவ்வாய்) காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.விளக்கு பூஜை, அன்னதானம், பால்குடம், மஞ்சள் நீர் அபிஷேகம் உள்ளிட்டவைகள் நடந்தது.நேற்று 5ம் தேதி காலை கிடா வெட்டி பொங்கலிடும் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாக தலைவர் ராமர், துணைத்தலைவர் முனியசாமி, செயலாளர் பால்பாண்டியன், பொருளாளர் பொன்னு நாடார்,சாயல்குடி அ.தி.மு.க., நகர் செயலாளர் ஜெயபாண்டியன்,கணக்கர் சேர்மன்உள்ளிட்டோர் செய்திருந்தனர்.