விருதுநகர் மாரியம்மன் கோயிலில் பங்குனி விழா துவக்கம் : ஏப்.8ல் பொங்கல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2012 11:04
விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா சிறப்பு பெற்றதாகும், இங்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர். நேற்று முன் தினம் இரவு துவங்கிய விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். விழா துவங்கிய நாளில் இருந்து ,அம்மனுக்கு பெண்கள் வேப்பிலை கலந்த தண்ணீர் ஊற்றி வேண்டுதல் செய்து வருகின்றனர். ஏப். 2 முதல் அம்மன் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து, மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஏப். 8 ல் பொங்கல், ஏப். 9 ல் கயிறுகுத்து, அக்னி சட்டி எடுத்தல் என பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவர். ஏப். 10 ல் தேராட்டம் , ஏப். 12 ல் மஞ்சள் நீராட்டுடன் கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏப். 15 ல் முடிவடைகிறது. தினம் இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. ஏற்பாடுகளை இந்து நாடார் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.